google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: மேகி (#BanMaggi)-ட்விட்டர் காமெடி கலாட்டா

Thursday, June 4, 2015

மேகி (#BanMaggi)-ட்விட்டர் காமெடி கலாட்டா

சமுக அவலங்களை துள்ளி குதித்து எள்ளி நகைப்பதில் தமிழ் நையாண்டி டிவிட்டர்களை மிஞ்ச யாராலும் முடியாது 

மேகி நூடுல்ஸில் அதிக அளவு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் கலந்துள்ளதாக சில மாநிலங்களில் தடை செய்யப் பட்டுள்ள நிலையில்........

அதன் விளம்பரங்களில் நடித்துள்ள நடிகர்  நடிகைகள் .மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் நிலை வந்துள்ளது

இதனால் மற்ற விளம்பரங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மத்தியில் ஜுரம்  எனக்கும் சென்னை அமிர்தாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார் நடிகை ராதிகா

இன்னும் சில குளிர்பான விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்கள் ஆர்யா,விஷால்....போன்றவர்கள் பயத்தில் பிதற்றுகிறார்கள்

இத்தகைய நிலைக்கு  எத்தனையோ சமுக புரட்சி செய்துள்ள முகநூல்,ட்விட்டர்....போன்ற சமுக வலைத்தளங்களே காரணம்
The Protagonist@arvinfido 
மனைவி: ராத்திரி மேகி ஓகே'வா?
 கணவன்: அது சாப்பிட கூடாதாம். பேப்பர் பாக்கலையா?
மனைவி: ஐயோ. சரி உப்மா பண்ணவா?
 கணவன்: போற உசுரு மேகிலேயே போகட்டும்..\


நதி முகம் @nadhimugam 
மேகி சத்தான உணவு என்று தீர்ப்பு வர வேண்டுமா ??? 
கேஸை கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு மாற்றவும்

bharanidharan@bharanidharan06 
அதுக்காக எனக்கு குமாரசாமிதான் நீதிபதியா வேணும்னு  
மேகி கம்பெனிக்காரன் கேக்குறது எல்லாம் ஓவர்யா

குட்டி :)@7da_kutty 
மேகி பேன் பண்ணிட்டாங்க! 
ஒயின்ஷாப் டைம் குறைச்சிட்டாங்க!! 
உலகம் அழியப்போறதுக்கான அறிகுறி தெரியுது!

பேங்க் ஆபிசர்@Sathish26990 
இடியாப்பத்தின் வாழ்வுதனை மேகி கவ்வும் 
மீண்டும் இடியாப்பமே வெல்லும்
மைக்கிள் செல்வம்@Michael_selvam 
வெங்கடேஷ் ஆறுமுகம் 2 hrs · வீட்டுக்கு வாங்களேன் ப்ரண்ட்ஸ் 
4 பாக்கெட் மேகி இருக்கு சாப்பிட்டுகிட்டே பேசுவோம்.

புதிரா புனிதமா @Puthira 
மேகி,நூல்டுஸ் க்கு தடை செய்த மாதிரி 
அப்படியே உப்புமாவுக்கும தடை பன்னிட்டா 
புண்ணியமா போகுமா எஜமான் . 
# பொண்டாட்டி அடிக்கடி கொடுக்கிற தண்டனை.

நரேந்திர மோடி@narendrermodi 
மேகி வந்ததும் என்ன மறந்துட்டாய்ங்க.. 
இவிங்களுக்கு சுயநினைவு வருவதுக்குள்ள பக்கத்துல இருக்க அண்டார்டிக்கா போயிட்டு வந்துடனும். என்னா வெயில்..

சாம்ராட்@Its_SaamRaat 
மேகி விளம்பரத்துல நடிச்சவர கைது பண்றீர். இங்க ஒருத்தன் "கோக் குடிடா ராப் பண்ணுடா."ன்னு பாடினான். அவன என்ன பண்ண போறீர்


மேகி நூடுல்ஸ் விவகாரம்: அமிர்தா அம்மணிக்கு ஜூரம் அடுத்து பெப்ஸி, கோக் விளம்பரத்தில் நடித்த நம் கூத்தாடிகள் என்ன ஆவார்களோ? தல தப்பிச்சு

piramanayagam @kprcpn 
மேகி குழந்தைகளின்உடல் நலத்திற்க்கும் கேடுன்னு ஒரு வரிய போட்டு விற்பனைக்கு செய்ங்க நாங்க சரக்க அப்படித்தேன் ஒரு வரிய போட்டு விக்கிறோம்

Siva♥Nakshatra@mistrysiva 
வக்கீல் வண்டு முருகன்: என் கட்சிக்காரர் mr.குருவிகூடு மேகி பாக்குறதுக்கு நாக்குபூச்சி மாதிரி இருக்கறதுனால கொஞ்சம் மருந்து அடித்திருக்கிறார்

வெங்கடேஷ் ஆறுமுகம்@venkatesh6mugam 
மேகிக்குறள்1  
மேகி செய்தாரை ஒறுத்தல் அவர் நாண 
இடியாப்பம் செய்து விடல்.
சிங்கத்தின் கர்ஜனை @AandeaDA 
நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்தவர்கள் மீது பழி போடக்கூடாது- குஷ்பூ #ஒரு மேகி பாக்கெட்டை வாங்கி அவங்க சாப்பிட்டா வழக்கை வாபஸ் வாங்கிடலாம் மேடம்

இதுபோன்ற கணக்கற்ற குறும்பதிவுகள் ட்விட்டர்,பேஸ்புக் வலைதளங்களில் வந்துகொண்டிருக்கின்றன அனைத்து தொலைக்காட்சிகளிலும் இதைப் பற்றியே பேச்சு...... 
ஆனால் ஊடகங்களும் இந்த அவலத்திற்கு பொறுப்பு என்பதை மறந்துவிட்டு........ 

உண்மையில் மேகி நூடுல்ஸ் மட்டுமல்ல எல்லா நூடுல்ஸ்களிலும் எல்லா சுவையான நொறுக்கு தீனிகளிலும் சுவைக்காக பல வேதிப் பொருட்கள் கலக்கப்படுகின்றன



نكهات كيميائية ......
Posted by ‎عبدالله بن عثمان الغامدي‎ on Tuesday, May 19, 2015


நூடுல்ஸ் டேஸ்ட்க்கு அதிலுள்ள flover-ல் ஒரு பட்டாசுக்கான வெடிமருந்தே இருக்குதாம் வீடியோ ஆதாரம்
மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்தவர்கள் மீது வழக்கு பதிவு # ஏன்டா தயாரிச்சவங்கள விட்டுட்டு நடிச்சவங்க மேல கேஸா?இதுதான் உங்க ஜனநாயகமா? நல்லா இருக்குடா உங்க நியாயம்?
Posted by Parithi Muthurasan on Tuesday, June 2, 2015


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1